Monday, August 13, 2007

351. தஸ்லிமாவும் MIM அராஜகமும்

இது பற்றி ஏதாவது பதியப்பட்டு வலைப்பதிவுகளில் விவாதம் நடைபெற்றதா என்று தெரியவில்லை. என் கண்டனத்தை பதியவே இதை எழுதுகிறேன்.

பங்களாதேஷ் பெண் எழுத்தாளர் தஸ்லிமா MIM சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொ(கு)ண்டர்களால் ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது தாக்கப்பட்டதை வாசித்திருப்பீர்கள், தொலைக்காட்சியிலும் அந்த அராகஜ வன்முறையை பார்த்திருப்பீர்கள்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், குண்டர்கள் போல் நடந்து கொண்டதோடு அல்லாமல், பின்னரும் அந்த கேவலமான செயலுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. நல்லவேளை, தஸ்லிமாவை உடன் இருந்த மீடியாக்காரர்கள் பெரும் ஆபத்திலிருந்து காத்துள்ளனர்.

இந்த அராஜக நிகழ்விற்கு உச்சமாக, MIM தலைவர் அக்பரூதின் ஓவைஸி, தஸ்லிமா மறுமடியும் ஐதரபாத் வந்தால், அவர் தலை கொய்யப்படும் என்று தலிபான் தலைவர் போல் ஒரு அராஜக மிரட்டல் விடுத்துள்ளார்! நாம் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதியில் இருக்கிறோமா அல்லது இந்தியாவில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. இதே அக்பருதீன் MIM ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார் கைது செய்ய விடாமல் தடுத்து பெரும் ரகளையும் செய்தார்.

ஜனநாயகத்திலும், கருத்துச் சுதந்திரத்திலும், மதச் சார்பின்மையிலும் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜூவி கட்டுரை ஒன்றில், இந்த தாக்குதலை முன்னின்று நடத்தியவர்களை கடுமையாக கண்டித்து எழுதியுள்ள கவிஞர் இன்குலாப், பாபர் மசூதியை இடித்ததற்கும், தஸ்லிமாவை அடித்ததற்கும் எந்த வேறுபாடும் இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என்கிறார். மேலும், 'ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஆண்கள் மணந்து கொண்டது போல் நானும் எனக்கு வசதியிருந்தால் பல ஆண்களை மணந்து கொண்டிருப்பேன்' என்ற தஸ்லிமாவின் விமர்சனத்தின் அடிப்படையில், பழமைவாதிகள் ஆராயாமல் அவரை ஒழுக்கம் கெட்டவள் என்பதையும், பாபர் மசூதி இடிப்பின் எதிர்வினையாக, பங்காளாதேஷில் சிறுபான்மை இந்து சமூகம் தாக்கப்பட்ட நிகழ்வுகளை தகுந்த ஆதாரங்களோடு தமது 'லஜ்ஜா' நாவலில் தஸ்லிமா அம்பலப்படுத்தியிருப்பதால் அவர் இஸ்லாத்திற்கு எதிரானவர் ஆகி விட்டதையும், இன்குலாப் வேதனையோடு குறிப்பிடுகிறார்.

தஸ்லிமாவின் 'லஜ்ஜா' என்ற நாவலை மேற்கு வங்காள அரசு ஏற்கனவே தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது! இன்குலாப், "பாசிஸம் என்பது நாஜிக்களுக்கு மட்டும் உரியது அன்று, எந்த பழமைவாத மூர்க்கர்களுக்கும் இந்த பாசிஸம் உரியது என்பதைத் தான் ஐதரபாத்தில் நடந்தேறிய தாக்குதல் எடுத்துக் காட்டுகிறது! இதை ஜனநாயகவாதிகள் எதிர்த்து முறியடிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாதை ஒரு நிருபர் அவர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறா என்று வினவியபோது, அவர்,"தஸ்லிமாவையும் கண்டிக்கிறேன், தாக்கியவர்களையும் கண்டிக்கிறேன்" என்று திருவாய் மலர்ந்து காமெடி செய்தார். பாவம், காஷ்மீரில் அவர் நிலைமை அப்படி!

தஸ்லிமாவை தாக்கிய MIM சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மீது கொலை முயற்சிக்கான வழக்கு பதியாமல், ஐதரபாத் போலீஸார் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்ததற்காகவும், பொருட்களை சேதப்படுத்தியதற்காகவும் வழக்கு தொடுத்துள்ளது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை (இதனால் தாக்கியவர்களுக்கு சுலபமாக பெயில் கிடைத்து விட்டது!) அரசு எவ்வழி, போலீஸ் அவ்வழி! இதே போலீஸார் சமீபத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சகோதரரை ஒருவர் அடித்த ஒரு சாதாரண செயலுக்கு அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ததை இங்கே நினைவு கூர்வது அவசியமாகிறது!

இந்த நிகழ்வுக்கு முன்பே, தஸ்லிமா பல எதிர்ப்புகளை சந்தித்திருந்தாலும், தான் இம்முறை மரணத்திற்கு அருகில் இருந்ததாக உணர்ந்ததாகவும், உடன் இருந்த மீடியாக்காரர்கள் தான் தன்னை உயிராபத்திலிருந்து காத்து மீட்டதாகவும் தஸ்லிமா கூறியுள்ளார். கருத்தை கருத்து மூலம் எதிர்கொள்ளாமல் பேசுபவரின் வாயையும், எழுதுபவரின் கையையும் வன்முறையின் துணை கொண்டு முடக்கும் செயல்கள் தற்போது அதிகரித்து வருகிறது!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 351 ***

24 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

said...

சார்,
எனக்கு தஸ்லீமா மீது தனிப்பட்ட முறையில் நல்ல அபிப்ராயம் உண்டென்றாலும், அவர் ஹைதராபாத் வந்தது, தேவையில்லாததாகவே படுகிறது. ஹைதராபாத் நமக்குத்தெரிந்து முஸ்லீம்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதி. இந்தியாவில் எல்லா இடமும் இருக்க அங்கே போய் நிகழ்ச்சி நடத்தியது வீணாக அங்கிருக்கும் முஸ்லீம்களை வம்பிழுத்ததாகவே கருத இடமிருக்கிறது. இது தேவையில்லாதது, தவிர்த்திருக்கக்கூடியது. தவிர்த்திருக்க வேண்டியது.

வேலியில் போகும் ஓணானை எடுத்து மடியில் விட்டுக்கொண்டார் என்றே சொல்லலாம். அவரது கருத்தை சொல்ல அவருக்கு முழு உரிமையும் உண்டுதான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் அதை ஹைதராபாதில் செய்ததில் விவேகமின்மை தான் தெரிகிறது.

ஒருவேளை அவர் அதைத்தான் விரும்பினாரோ என்னவோ?

enRenRum-anbudan.BALA said...

தங்கள் கருத்துக்கு நன்றி, பொற்கொடி. பிரச்சினை வரக்கூடும் என்பதால் தான், விளம்பரம் இன்றி, இந்த புத்தக வெளியீட்டு விழா ஏற்பாடாகி இருந்தது. இருந்தும் ....

said...

பதிவுக்கு நன்றி ...

ராஜ நடராஜன் said...

நெஞ்சு பொருக்குதில்லையே....

said...

//அவர் ஹைதராபாத் வந்தது, தேவையில்லாததாகவே படுகிறது. ஹைதராபாத் நமக்குத்தெரிந்து முஸ்லீம்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதி. //

தஸ்லிமா ஹைதராபாத் வந்தது அவருடைய புத்தகத்தின் தெலுகு மொழி பதிப்பை வெளியிட. தெலுகு புத்தகத்தை வேறெங்கு வெளியிட வேண்டும் என நினைக்கிறீர்கள்?

இதில் வேடிக்கை என்னவென்றால், இஸ்லாமிய பிரமுகர்கள் தங்களின் வாதத்துக்கு வலு சேர்ப்பதற்காக, இப்போது ஓவியர் M.F ஹுசைனுக்கு எதிரான இந்துக்களின் தாக்குதலை ஏற்றுக்கொள்வதும், சரியென்பதும்தான்.

மதசார்பற்றவர்கள், சுயமரியாதைகாரர்கள், திராவிடர்கள், நடுநிலமைக்காரர்கள் சத்தத்தையே காணோம். எல்லாம் ஆழ்ந்த தூக்கத்துக்குச் சென்றுவிட்டார்கள் போலும். இப்போ தஸ்லீமாவுக்கு ஆதரவாப் பேசினா எங்கே ரம்ஜானுக்கு பிரியாணி வராது பூடுமோ என்ற கவலையாக இருக்கலாம் :)

சீனு said...

//இதே போலீஸார் சமீபத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சகோதரரை ஒருவர் அடித்த ஒரு சாதாரண செயலுக்கு அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ததை இங்கே நினைவு கூர்வது அவசியமாகிறது!//

அதனால் என்ன? தஸ்லீமா கேஸை மின்மாதிரியாய் வைத்து ஜாமீன் வாங்கிவிடலாமே!

//இந்தியாவில் எல்லா இடமும் இருக்க அங்கே போய் நிகழ்ச்சி நடத்தியது வீணாக அங்கிருக்கும் முஸ்லீம்களை வம்பிழுத்ததாகவே கருத இடமிருக்கிறது.//

பொற்கொடி மேடம்,

முஸ்லீம்கள் நாடான வங்கதேசத்திலேயே 'லஜ்ஜா'வை எழுதியவர். அப்படிப்பட்டவர் ஹைதராபாத் போனது வீணாக என்பது சரியில்லையே!

-/பெயரிலி. said...

பாலா சார்

ஒரு சாதாரண விஷயத்தை இத்தனை பெரிதாக்கி விவாதிப்பதில் யாருக்கு என்ன பயன் ??
;-)

said...

do you support shivashena and vhp gundas who made fire on paintings of m f hussain.

dont see communal problems between muslims and hindu.

said...

//இது பற்றி ஏதாவது பதியப்பட்டு வலைப்பதிவுகளில் விவாதம் நடைபெற்றதா என்று தெரியவில்லை. என் கண்டனத்தை பதியவே இதை எழுதுகிறேன்.//

முதலில் நீங்கள் இந்த பிரச்சனையை பதிந்ததற்கு நன்றி! வலைபதிவுகளில் மொக்கைதான் இப்போ ஹாட் மெட்டர், உண்மை பேச சிலரே உள்ளனர்.

//மதசார்பற்றவர்கள், சுயமரியாதைகாரர்கள், திராவிடர்கள், நடுநிலமைக்காரர்கள் சத்தத்தையே காணோம். எல்லாம் ஆழ்ந்த தூக்கத்துக்குச் சென்றுவிட்டார்கள் போலும்.//

சரியான கேள்வி பாலா. All the so called secularists are maintaining a deadly silence on this matter, which shows their true colors. (that they are only anti-hindu). There is essentially no difference between other extremist religious groups and the secularists.

ச.மனோகர் said...

'பாலா சார்

ஒரு சாதாரண விஷயத்தை இத்தனை பெரிதாக்கி விவாதிப்பதில் யாருக்கு என்ன பயன் ??'

இதை எப்படி சாதாரண விசயம் என்று பெயரிலி சொல்கிறார் என புரியவில்லை.மாற்றுக் கருத்து சொன்னதற்காக அடிப்பது சாதாரண விசயமா?

பாலா..அராஜகத்திற்கு எதிரான தங்களின் குரலோடு என் குரலையும் இணைத்துக் கொள்கிறேன்.

said...

இல்லாததையா அந்தம்மா எழுதினாங்க? இஸ்லாத்தில் நடப்பதைப் பற்றித்தானே எழுதினார்கள். ஏன் *** edited ***் இப்படி குதிக்க வேண்டும்?

said...

பின்னூட்டங்களே இல்லாமல் உங்களுக்கு நீங்களே அனானியாகவும், ரசிகர்மன்றம் என்ற பெயரில் இந்த மொக்கை போஸ்ட்டுக்கு பின்னூட்டம் போட்டு கொள்வதால் உங்கள் பதிவை சிறந்த மொக்கை பதிவாக சிபாரிசு செய்கிறோம்.

enRenRum-anbudan.BALA said...

நட்டு, நன்றி.

அனானி,
கருத்துக்கு நன்றி.
//மதசார்பற்றவர்கள், சுயமரியாதைகாரர்கள், திராவிடர்கள், நடுநிலமைக்காரர்கள் சத்தத்தையே காணோம்.
எல்லாம் ஆழ்ந்த தூக்கத்துக்குச் சென்றுவிட்டார்கள் போலும்.
//
அவங்க முக்கியமான சமயத்துல "காணாம" போயிடுவாங்க அல்லது "தூங்கி"டுவாங்க, அதானே அவங்க நார்மல் பிஹேவியர் ;-)

சீனு,
வாங்க, நன்றி.
//அதனால் என்ன? தஸ்லீமா கேஸை மின்மாதிரியாய் வைத்து ஜாமீன் வாங்கிவிடலாமே!
//
:))))

பெயரிலி அய்யா,
//
ஒரு சாதாரண விஷயத்தை இத்தனை பெரிதாக்கி விவாதிப்பதில் யாருக்கு என்ன பயன் ??
//
I really appreciate your MASTERY in these things :))) சீரியஸா இது குறித்து கருத்து ஏதாவது சொல்லுங்களேன் !

அனானி,
//do you support shivashena and vhp gundas who made fire on paintings of m f
hussain.
//
Why should I support ? But, there is a difference between burning paintings and physically abusing a person ! Anyway, I condemn any type of violence.

எ.அ.பாலா ரசிகர் மன்றம்,
கருத்துக்கு நன்றி.
//All the so called secularists are maintaining a deadly silence on this matter, which shows their true colors. (that they are only anti-hindu). There is essentially no difference between other extremist religious groups and the
secularists.
//
That is the TRUTH!

பாபு மனோகர்,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
//
இதை எப்படி சாதாரண விசயம் என்று பெயரிலி சொல்கிறார் என புரியவில்லை.மாற்றுக் கருத்து
சொன்னதற்காக அடிப்பது சாதாரண விசயமா?
//
பெயரிலி என்னை கேலி செய்து எழுதியது அது :) மாலனின் சமீபத்திய பதிவின் பின்னூட்டங்களை
வாசியுங்கள் !

அதியமான்,
வாங்க, நன்றி.

எ.அ. பாலா

ச.மனோகர் said...

அதெல்லாம் படித்தால்தான் இந்த உள் குத்து புரியுமா?

ஒரு பின்னூட்டம் இடுவதற்கு ஹோம் ஒர்க் எல்லாம் செய்துவிட்டுதான் வர வேண்டும் போலிருக்கு..!

Renie Ravin said...

Hi, please add your blog to our new directory of Indian Blogs, thanks!

http://www.indiblogger.in

enRenRum-anbudan.BALA said...

அனானி நண்பா,
//பின்னூட்டங்களே இல்லாமல் உங்களுக்கு நீங்களே அனானியாகவும், ரசிகர்மன்றம் என்ற பெயரில் இந்த மொக்கை போஸ்ட்டுக்கு பின்னூட்டம் போட்டு கொள்வதால் உங்கள் பதிவை சிறந்த மொக்கை பதிவாக சிபாரிசு செய்கிறோம்.
//
முதலில் இது மொக்கைப் பதிவு இல்லை. அதற்கென்று ஒரு கூட்டமே இங்கு உள்ளது. எனக்கு நானே பின்னூட்டம் போட வேண்டிய அவசியமும் இல்லை. பிளாக் கவுண்டர் என் பதிவுகளுக்கு கணிசமான வாசகர்கள் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதுவே போதும்!

பாபு மனோகர்,
இப்போதாவாது "உள்குத்து" என்ன என்று புரிந்ததா ? :)))) மீள்வருகைக்கு நன்றி.

எ.அ.பாலா

said...

இந்தப்பதிவு அவசியமானது தான். நன்றி

இத்தாக்குதலுக்கு எதிராக அனைவரும் கண்டனத்தை பதிவு செய்தாக வேண்டும்.
அதுபோல,
சிவசேனை குண்டர்கள் அவுட்லுக் மீது நடத்திய தாக்குதலையும் கண்டித்து பதிவிடுவீர்களா?
இல்லை, எனக்குச்செய்தி கிடைக்கவில்லை என்று சொல்வீர்களா??

said...

'தஸ்லிமாவும் MIM அராஜகமும்' என்ற பொருத்தமான தலைப்பை வைத்ததற்காக பாலாவுக்கு வாழ்த்துக்கள்!. (அப்படியிருந்தும் - அதியமான் 'இஸ்லாத்தில் நடப்பதைப் பற்றித்தானே எழுதினார்கள், என்று 'இஸ்லாத்தை' வலிய இழுத்து ஆனந்தப்பட்டிருக்கிறார்).

இந்திய முஸ்லிம்களின் அல்லது ஆந்திர முஸ்லிம்களின் பிரதிநிதியல்ல MIM. மக்களின் மத உணர்வுகளை தூண்டி - வதந்திகளை பரப்பி - பய உணர்வை வளர்த்து- கீழ்தரமான வகுப்புவாத அரசியல் 'தொழில்' செய்யும் - 'சங்பரிவார' வகையை சார்ந்ததுதான் MIM அமைப்பு.

ஆக்கப்பூர்வமாக எதையும் செய்ய திராணியற்ற இந்த கும்பல், அதே மாதிரி மத துவேஷ மணப்பாண்மை கொண்ட 'ஹிந்துத்வ' கும்பலுடன் மோதி- வளர்ந்த இந்த அமைப்பு, தனது இருப்பை காட்டவும் - சரிந்துவரும் வாக்கு வங்கியை சரி செய்ய இது போன்ற 'ஸ்டண்ட்' (அடிதடி) அடிக்கவேண்டும் என்ற நியதிக்கு ஏற்ப தனது 'பலத்தை' தஸ்லிமா என்ற ஒரு பெண்ணிடம் காட்டியிருக்கிறது.

MIM க்கு பிடித்தமாதிரி தஸ்லிமா எழுதவில்லையென்றால் - படிக்காமல் புறக்கணிக்கவேண்டியதுதானே?

இதுபோல அடி -உதை என்று வன்முறையில் ஈடுபடுவது 'வகுப்புவாதிகள்' ஒரு போதும் திருந்தவே மாட்டார்கள் என்பதையே நிரூபிக்கிறது.

கலவரத்தில் ஈடுபட்ட வகுப்புவாதிகள் தக்க தண்டணை பெறவேண்டும் - என்பது ஆசை, ஆனால் அது நடக்காது என்று 'பச்சி' சொல்கிறது.

ஏன் தெரியுமா?

வகுப்புவாத யாத்திரை நடத்தியவர் துனை பிரதமராவதும் - அரசு நிர்வாக ஒத்துழைப்போடு வகுப்பு கலவரம் நடத்தியவர் மீண்டும் மீண்டும் 'முதலமைச்சராவது' - சாத்தியமாவது நமது இந்தியாவில்தான்.

அமிழ்தினியன்

said...

இங்கேயும்தான் போய் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்களேன்...

http://yehathuvaislam.blogspot.com/2007/08/blog-post_9342.html

said...

"""கருத்தை கருத்து மூலம் எதிர்கொள்ளாமல் பேசுபவரின் வாயையும், எழுதுபவரின் கையையும் வன்முறையின் துணை கொண்டு முடக்கும் செயல்கள் தற்போது அதிகரித்து வருகிறது!"""

பாலா...இதுதான் ஹை லைட்.

தஸ்லிமாவிற்காக இதை சொன்னீர்களா

இல்லை தினகரன் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதை மனதில் வைத்தா

இல்லை சமீபத்தில் தமிழ் வலைப் பதிவுகளை படித்ததின் தாக்கத்திலா ?

எப்படி இருந்தாலும் டைமிங் சூப்பர் :))))

கால்கரி சிவா said...

பாலா சார், கொஞ்சம் இதையும் பாருங்கள் http://sivacalgary.blogspot.com/2007/08/blog-post.html

-/பெயரிலி. said...

பெயரிலி அய்யா,
//
ஒரு சாதாரண விஷயத்தை இத்தனை பெரிதாக்கி விவாதிப்பதில் யாருக்கு என்ன பயன் ??
//
I really appreciate your MASTERY in these things :))) சீரியஸா இது குறித்து கருத்து ஏதாவது சொல்லுங்களேன் !

you could have posted your comment in Malan's blog with the similar seriousness that you expect from me ;-) what made to think it was light event?

I have no serious comment on thaslima as i finished using mine just after her lajjaa backlash.

if you really need one from me, here is one.

writer taslima and painter hussein were attacked for their freedom of speech. people should condemn both incidents without any religious reservation. period

enRenRum-anbudan.BALA said...

நவீன், அனானிஸ், கால்கரி சிவா, பெயரிலி,
வாசிப்புக்கும், கருத்துக்கும் நன்றி.
எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails